.

உங்கள் என்னங்களை வண்ணங்களாக்கி உங்கள் கனவுகளை நினைவுகளாக உருவாக்குவதே எங்களது சேவை ...!

Thursday, November 24, 2011


அனைவருக்கு வணக்கம். கடந்த இரண்டு நாட்களாக அதிக வேலை பளு அதுதான் பதிவுகள் தர இயலாத நிலை. சரி இனி நாம் இன்றையத் தகவலுக்கு வருவோம். பொதுவாக மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் நாம் இறந்துபோவதற்குள் ஏதேனும் ஒரு சிறப்பை செய்திருக்கவேண்டும் அப்பொழுதுதான் இந்த மனித பிறப்பிற்கு ஒரு சிறப்பு இருக்கிறது என்று படித்த ஞாபகம். அதுபோல் ஒவ்வொரு மனிதனும் சில சிறந்த பண்புகளால் பலரின் இதயங்களில் இடம்பிடித்து விடுகிறார்கள். சிலருக்கு தங்கள் குழந்தை, சிலருக்கு மனைவி, சிலருக்கு ரசிகன், சிலருக்கு தொண்டர்கள் என ஒவ்வொரு துறையைப் பொருத்தும் இந்த சிறப்புகள் மாறிக்கொண்டே செல்கிறது என்றபோதிலும் இவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒரே விஷயம் நல்ல பண்புகள், சிறப்பான செயல்கள் என்பவை மட்டுமே இருக்கக் கூடும். இன்னும் சிலர் எண்ணிக் கொள்வதுண்டு பணம் இருந்தால்தான் ஒரு மனிதன் அனைவருக்கும் தெரிந்த ஒருவனாக மாறுகிறான் என்பது சில நாட்களுக்கு மட்டுமே பொருத்தமான வார்த்தைகள் என்று சொல்லவேண்டும். இன்று நம்மிடம் இருக்கும் பணத்தால் நமக்கு கிடைக்கும் மதிப்புகள் மரியாதைகள் அனைத்தும் பணம் இல்லாத நிலைகளிலும் கிடைக்குமா என்பது ஒரு கேள்விக் குறியே. சரி இப்படி ஒவ்வொரு மனிதனையும் வேறுபடுத்திக் காட்டும் பல சிறப்புகள் ஒவ்வொருவருக்குள்ளும் உண்டு என்பது நாம் அறிந்ததே. இதில் பலர் மறைந்த பிறகும் எல்லோரின் இதயங்களிலும் மறக்காத பல சிறப்புகளை ஏற்படுத்தி செல்பவர்களும் உண்டு . இது போன்ற சிறப்புகளுக்கு உரிய ஒரு உயரிய எண்ணங்களைக் கொண்ட மனிதரைப் பற்றியப் பதிவுதான் இது. இவரைப் பற்றி அதிக அறிமுகங்கள் தேவை இல்லை. பல யதார்த்தங்களுக்கு சிறப்பு சேர்த்த ஒரு சிறந்த பண்பாளர் என்று சொல்லலாம். எளிமையான ஒரு அரசியல்வாதி. நேர்மை தவறாத கறுப்புத் தேகத்திற்கு சொந்தக்காரர்.

தனது சிறந்த பண்புகளால் தனது பெயருக்கு ஒரு புது முகவரி தந்தவர். இனம் காட்டும் நிறம். குணம் சொல்லும் உடை. தைரியம் அறிவிக்கும் உடல். வணங்கத் தோன்றும் முகம்... என நாலும் இணைந்த நல்லவர் காமராஜர்! 25 துளிகளுக்குள் அடக்கிவிட முடியாத மகா சமுத்திரமாக வாழ்ந்த கர்மவீரர்!
இவருக்கு காமாட்சி என்பது பெற்றோர் வைத்த பெயர். ராஜா என்றே உறவினர்கள் அழைத்தார்கள். காமாட்சியும் ராஜாவும் காலப் போக்கில் இணைந்து காமராஜ் ஆனது. டெல்லிக்காரர்களுக்கு 'காலா காந்தி', பெரியாருக்கு 'பச்சைத் தமிழர்', காங்கிரஸ்காரர்களுக்கு 'பெரியவர்' என்று ஒரு காலத்தில் திரும்பும் திசை எங்கும் பல புனைப் பெயர்களுடன் ஒற்றை முகத்தில் பல லட்சம் இதயங்களை கொள்ளைகொண்டவர் என்று சொல்லலாம்.

இன்று எந்த அரசியல் வாதியிடமும் இல்லாத யதார்த்தப் பேச்சு குவிந்து கிடந்த ஒரு களஞ்சியம் என்று சொல்லலாம். இந்த மனிதர் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகளை. இதெல்லாம் என்ன பேச்சுன்னேன்', 'அப்படி ஏன் சொல்றேன்னேன்', 'ரொம்ப தப்புன்னேன்', 'அப்பிடித்தானேங்கிறேன்', 'அப்ப பாப்போம்', 'ஆகட்டும் பார்க்கலாம்' போன்றவை அவர் அடிக்கடி பயன்படுத்தும் வாசகங்கள்!

யாருக்காகவும் தனது கொள்கைகளை மாற்றிக்கொள்ளாத மனிதராக திகழ்ந்தார் நேரு. உயிரோடு இருப்பவர்களுக்கு சிலை வைக்கக் கூடாது என்ற கொள்கை கொண்ட நேரு, அதையும் மீறித் திறந்த சிலை இவருடையதுதான் என்றால் பார்த்துகொள்ளுங்கள் எந்த அளவிற்கு இந்த மனிதர் வாழ்ந்திருப்பார் என்று..!.

பாராட்டுக்களையும், பட்டங்களையும் பணம் கொடுத்து வாங்கிக்கொள்ளும் அரசியல் வாதிகளின் மத்தியில் தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், 'கொஞ்சம் நிறுத்துன்னேன்' என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியை மோசமாகப் பேசினால், 'அதுக்கா இந்தக் கூட்டம்னேன்' என்றும் தடுப்பார்! கடிகாரம் கட்ட மாட்டார். சின்ன டைம்பீஸைத் தனது பையில் வைத்திருப்பார். தேவைப்படும்போது எடுத்துப் பார்த்துக்கொள்வார்..!

பதவி ஏற்ற மறுநொடியே மொத்த நாட்டையும் தனதாக்கிக்கொள்ள துடிக்கும் தலைவர்களின் மத்தியில் தான் முதலமைச்சர் ஆனது. இவரின் தாய் சிவகாமி தன் மகனுடன் சேர்ந்து இருக்க ஆசைப்பட்டிருக்கிறார். அதற்கு காமராசரோ நீங்கள் என்னுடன் இருக்க வந்தால் நமது உறவினர்களும் வந்து இருக்க ஆசைப்படுவார்கள். அதனால் கெட்டப் பெயர்தான் உருவாகும். ஆகவே விருதுநகரிலேயே இருங்கள் என்று சொல்லி இருக்கிறார். இது மட்டும் இல்லாது வீட்டையாவது சற்று பெரிதாக்கித் தரும்படி கேட்ட தனது அன்னையிடம் முடியாது என்று மறுத்தவர்.
இப்படி திகழ்ந்த இந்த மனிதரின் உணவு ரகசியங்கள் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும் என்றுத் தெரியலை. இதோ தெரிந்துகொள்ளுங்கள். மாதம் 30 நாளும் கத்திரிக்காய் சாம்பார் வைத்தாலும் மனம் கோணாமல் சாப்பிடுவார். என்றைக்காவது ஒரு முட்டை வைத்துச் சாப்பிட்டால் அது அவரைப் பொறுத்தவரை மாயா பஜார் விருந்து என்று இவரின் சிறப்பை பற்றி ஒரு ஊடகம் எழுதியக் கட்டுரை ஒன்றில் படித்திருக்கிறேன்.

இப்படித்தான் ஒரு முறை சுற்றுப்பயணம் சென்றிருந்த பொழுது தொண்டர்கள் தனக்கு கொடுத்த அன்பளிப்புகளை வாங்க மறுத்து கஷ்டப்படும் தியாகிக்கோ அல்லது விவசாயிக்கோ கொடுங்கள் என்று சொல்லி இருக்கிறார். இதுமட்டும் இல்லாது முதல் தடவை சைரன் ஒலியுடன் அவருக்கான பாதுகாப்பு கார் புறப்பட்டபோது அதில் செல்ல மறுத்து. 'நான் உயிரோடுதான இருக்கேன். அதுக்குள்ள ஏன் சங்கு ஊதுறீங்க?' என்றுக் கேட்டு அனைவரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் செய்தவர்.

நான் இதுவரை சினிமாவில் மட்டுமே பார்த்திருக்கிறேன். இந்த நிகழ்வை . உண்மையாக ஒரு மனிதனின் வார்த்தைகளுக்கு இத்தனை சக்தியா என்பதை இவரைப் பற்றி படித்தபொழுதுதான் உணர்ந்து கொண்டேன்.ஆம் நண்பர்களே..! இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும் அதை நிராகரித்து லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமர் ஆக்கினார். 'கிங் மேக்கர்' என்ற பட்டத்தை மட்டும் தக்க வைத்துக்கொண்டார் இந்த மனிதர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

தமிழ் நாட்டில் இன்னும் பலருக்கு படிக்காத தலைவர்கள் என்று சொன்னால் முதலில் இவரின் பெயரைத்தான் உச்சரிக்கிறார்கள். 'ஆறாவது வரை படித்தவர்தானே! என்ற அலட்சியத்துடன் முதல்வர் காமராஜரின் அறைக்குள் அலட்சியமாக நுழைவார்கள் அதிகாரிகள். வெளியே வரும்போது அவர்களின் வால், கால்சட்டைக்குள் மடக்கிச் சொருகப்பட்டு இருந்தது!' ஆனால் உண்மையில் ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பேசுவார். பத்திரிகையாளர் சாவி ஒருமுறை சந்திக்கச் சென்றபோது ஜான் கன்டர் எழுதிய இன்சைட் ஆப்பிரிக்கா என்ற ஆங்கிலப் புத்தகத்தைப் படித்துக்கொண்டு இருந்துகொண்டிருக்கிறார் இந்த மனிதர் என்றால் பார்த்துகொள்ளுங்கள்.

அதிக கேள்விகளுக்கு குறைந்த நேரத்தில் பதில் அளிப்பது எப்படி என்று இந்த மனிதரிடம் இருந்துதான் கற்றுக்கொள்ளவேண்டும். அவரளவுக்குச் சுருக்கமாக யாராலும் பேச முடியாது. உ.பி-யில் ஒரு ஊடங்கங்களின் சந்திப்பில் 50 கேள்விகளுக்கு ஏழு நிமிடத்தில் பதில் சொன்னாராம். இரண்டரை மணி நேரத்தில் எட்டு ஊர்களில் கூட்டம் பேசியிருக்கிறார். இசை விழாவைத் தொடக்கிவைக்க அழைத்தார்கள். 'இசை விழாவைத் தொடக்கிவைப்பதில் பெருமைப்படுகிறேன்' என்று மட்டுமேசொல்லி விட்டு மேடையில் இருந்தி இறங்கிவிட்டார் என்றால் பார்த்துகொள்ளுங்கள் .
இதுவரை இருந்த முதல் அமைச்சர்களிலே மிகவும் வித்தியாசமான ரசனை கொண்டவர் இவர் என்று சொல்வது சால சிறந்ததே ஆம் நண்பர்களே. மொத்த அரசியல் தலைவர்களில் நாற்காலி விரும்பாத ஒரு தலைவர் இவர்தான் என்று சொல்லவேண்டும். நாற்காலியில் உட்காருவது அவருக்குப் பிடிக்காது. சோபாவில் இரண்டு பக்கமும் தனது நீளமான கைகளை விரித்தபடி உட்காரவே விரும்புவார். முதல்வராக இருந்தபோதும் தலைமைச் செயலகத்தில் பிரத்யேகமாக சோபா வைத்திருந்தார் என்றால் பார்த்துகொள்ளுங்கள்.

இன்று இருக்கும் அரசியல்வாதிகளில் எத்தனை பேருக்கு பின் வரும் சிறப்புகள் இருக்கும் என்று தெரியவில்லை ஆனால் இந்த சிறந்தப் பண்புகளை முதன் முதலில் அரசியலில் விதைத்து சென்ற ஒரே மனிதர் இவர்தான் என்று சொல்லவேண்டும். ஆம் நண்பர்களே..! தான் முதலமைச்சரானபோது தன்னை எதிர்த்து முதல்வர் வேட்பாளராக நின்ற சி.சுப்பிரமணியத்தையும் அவரது பெயரை முன் மொழிந்த பக்தவத்சலத்தையும் அமைச்சரவையில் இணைத்துக் கொண்டார்..!


விருதுநகர் தொகுதியில் அவர் தோற்றபோது கட்சிக்காரர்கள் அழுதார்கள். 'இதுதான்யா ஜனநாயகம். ஜெயிச்சவனைக் குறை சொல்லாமல் தோத்துப் போனதைப் புரிஞ்சுக்கிட்டாதான் அடுத்த முறை ஜெயிக்க முடியும்!' என்று அலட்டிக்கொள்ளாமல் சொன்னவர். தனது வலதுகரமாக இருந்த ஜி.ராஜகோபாலன் இறந்தபோது மட்டும்தான் காமராஜரின் கண்கள் லேசாகக் கலங்கினவாம். தாய் சிவகாமி இறந்தபோதுகூட அழவில்லை அவர்!

இப்படிப்பட்ட ஒரு சிறந்த மாமமனிதர் இன்ஃப்ளூயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த காமராஜருக்கு 1975 அக்டோபர் 2-ம் தேதி இறந்துபோனார். ஒன்பது ஆண்டுகள் முதல் அமைச்சர், பல ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த அவர், இறக்கும்போது மிச்சம் இருந்தது பத்து கதர் வேஷ்டிகள், சட்டைகள் மற்றும் நூறு ரூபாய்க்கும் குறைவான பணம் மட்டுமே என்றால் பார்த்துகொள்ளுங்கள் !

இன்று உலகத்தில் நீங்கள் ஒருவராக இருக்கலாம் ஆனால் யாரேனும் ஒருவருக்கு நீங்களே உலகமாக இருக்கலாம். இந்த வரிகளுக்கு முழுவதும் பொருத்தமானவராக வாழ்ந்து சென்றிருக்கிறார் தலைவர் காமராசர்.

டிஸ்கி :
இன்று இருக்கும் அரசியல் வியாதிகளில் மன்னிக்கவும் அரசியல் வாதிகள் சொத்தின் மதிப்பில் மில்லியன் கோடிகளை நெருங்கிக் கொண்டிருக்கிரார்கள். தினமும் வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளி இன்னும் கை ஏந்திக் கொண்டேதான் இருக்கிறார்கள் .

Tuesday, November 22, 2011

ICE DIGITALS / Bill Gates

நிலவைத் தொடும் பில்கேட்ஸ் சொத்து மதிப்பு -Indru oru thagaval ICE DIGITALS / Bill Gates

னைத்து உறவுகளுக்கும் வணக்கம். உலகத்தில் தினமும் நமக்கு தெரிந்தும் தெரியாமலும் எத்தனை எத்தனையோ நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன. இவை அனைத்தையும் நம்மால் தினமும் அறிந்துகொள்ள இயலுமா என்றக் கேள்வியை நமக்கு நாமே கேட்டுக்கொள்ளும் நேரத்திற்குள் எத்தனையோ மில்லியன் சம்பவங்கள் நம்மை கடந்துவிடும் என்பது நம்மில் யாரும் மறக்க இயலாது ஒன்று, சரி அதற்கும் இந்த பதிவிற்கும் என்ன தொடர்பு என்று எண்ணத் தோன்றும்.

நாம் தினமும் நடக்கும் சம்பவங்கள் அனைத்தையும் பற்றி அறிந்துகொள்ள இயலாவிட்டாலும் உலகத்தில் இதுவரை நிகழ்ந்து முடிந்த அல்லது இப்பொழுது நிகழ்ந்துகொண்டிருக்கும் அல்லது இனி நடக்கவிருக்கும் பல நிகழ்வுகளில் புதைந்து கிடக்கும் பல வினோத அரிய சுவாரசியமானத் தகவல்களைப் பற்றி அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதன் அடிப்படையில்தான் இந்த பதிவின் முயற்சி என்று சொல்லலாம் . சரி இனி நாம் வியப்புகளுடன் கூடிய சுவாரசியமானத் தகவல் உலகத்திற்குள் செல்லலாம் .



பொதுவாக நம்மில் பலர் தினமும் சலித்துக் கொள்வதுண்டு என்னடா இது வாழ்க்கை என்று இது ஒரு ரகம், இதற்கு முக்கியக் காரணம் பணம் என்பார்கள் . இன்னும் சில பிறந்தால் இவன் போல் பிறக்க வேண்டும் என்று சொல்லிக் கொள்வார்கள் இதற்கு காரணம் பணம் என்பார்கள். இப்படி பணத்திற்கு தினமும் பல முகங்களை பொறுத்து நம்மில் ஒவ்வொருவரும் ஒரு கோணத்தில் வாழ்க்கையை நகர்த்தி வருகிறோம் . அப்படிப்பட்ட இந்த பணம் அதிகம் இருக்கும் உலகத்தின் தலை சிறந்த சாதனையாளரைப் பற்றிய பதிவுதான் இது என்று சொல்லலாம் . இந்த மனிதரைப் பற்றி தெரியாதவர்கள் இன்று மிகவும் குறைவு என்று சொல்லலாம் இவரின் முயற்சி இல்லை என்றால் இன்று உலகமே ஒரு வேலை செயலிழந்து போய் இருக்கும். ஆம் நண்பர்களே..! அவர் வேறு யாரும் இல்லை உலகத்தின் உயர்ந்த பணக்காரகளில் பல முறை முதல் இடம் பிடித்து உலகையே இன்று தன்பக்கம் திரும்ப செய்த பில்கேட்ஸ் (Bill Gates microsoft) தான் அவர் . இவரைப் பற்றி சொல்லத் தொடங்கினால் இவரின் சொத்தின் மதிப்பை விட நீளமாக செல்லும் இந்த தகவல்.

ரி இவை எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் இன்று நான் வைத்திருக்கும் தலைப்பிற்கு வருவோம். பலர் எல்லோரும் ஆர்வத்துடன் வந்து படிக்க வேண்டும் என்று பதிவிற்கு பொருத்தம் இல்லாத தலைப்புகளை பொருத்தி வாசகர்களின் எதிர்பார்ப்புகளை ஏமாற்றி விடுகிறார்கள். ஆனால் இந்த பதிவின் தலைப்பு அந்த வகையில் அமையாது என்பதை பதிவின் இறுதியில் உங்களை உணர வைக்கும். சரி இன்னும் பில்கேட்ஸ் பற்றிய சில வியப்பான தகவல்களைப் பார்க்கலாம் .

 நம்மில் பலர் தினமும் ஒரு ரூபாய் என்று சொல்லப்படும் நாணயத்திற்காக தினமும் எப்படியெல்லாமோ உழைத்துக் கொண்டிருக்கிறோம் . ஆனால் இந்த மனிதரின் சட்டைப் பையில் இருந்து ஒரு ரூபாய் நாணயம் ஒரு வேலை தவறி கீழே விழுந்துவிட்டால் அதை குனிந்து எடுப்பதற்குள் பல மில்லியன்கள் இவருக்கு நஷ்ட்டமாகிவிடும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதுமட்டும் இல்லைங்க இன்னும் ஒரு தகவல் இருக்கு அது இவரிடம் இருக்கும் பணத்தின் மதிப்பு எவ்வளவோ என்பதை நாம் அறிந்துகொள்வதற்காக ஒரு திறவுகோல் என்று சொல்லலாம்.

மக்கு தெரிந்த வரை உலகத்தில் அதிகமான வருமானம் ஈட்டுபவர்கள் என்றால் அதிக பட்சமாக நடிகர்களைப் பற்றிதான் தெரியும் ஆனால் இவரின் ஒரு நிமிட வருமானம் பற்றி தெரிந்தாலே நமக்கெல்லாம் தலை சுற்றல் வந்துவிடும் .

பில்கேட்ஸ் (Bill Gates ) ஒரு விநாடியில் 350 அமெரிக்க டொலர்களை சம்பாதிக்கிறார். அதாவது இவரது ஒரு நாளைய சம்பாத்தியம் 25 மில்லியனை தாண்டும் என்கிறார்கள். அதுமட்டும் இல்லைங்க இவரின் ஒரு வருட வருமானம் 10.8 பில்லியனுக்கும் அதிகம் என்றால் பார்த்துகொள்ளுங்கள்.

துவரை நம்மில் இப்பொழுது சொல்லப் போகும் தகவல் எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. உலகத்தில் உள்ள விளையாட்டு வீரர்களில் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள மைக்கேல் ஜோர்டான். இவர் சற்று அதிகம் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். ஒருவேளை இவர் குடிப்பதை நிறுத்த நேர்ந்தால் இவருடைய ஆண்டு வருமானம் 35 மில்லியன் அமெரிக்க டொலர்கள். அப்படிப்பட்ட இந்த வீரர் ஒருவேளை பில்கேட்ஸ் இப்பொழுது இருக்கும் நிலையை எட்டவேண்டும் என்று எண்ணினால் இதே சம்பளத்தில் இன்னும் 230 வருடங்கள் உழைக்கவேண்டும் என்றால் பார்த்துகொள்ளுங்கள்.

த்துடன் மட்டும் நின்று விடவில்லை இந்த மனிதனைப் பற்றிய பிரமிப்புகள் இன்னும் இருக்கிறது. ஒருவேளை பில்கேட்ஸ் வைத்திருக்கும் மொத்தப் பணத்தையும் ஒரு டாலர் அளவில் உருவாக்கினால் அதை வைத்து பூமியில் இருந்து நிலவு வரை பாதை அமைத்து பத்திற்கும் அதிகமானவர்கள் சுதந்திரமாக வந்து போகலாம். அப்படி இந்தப் பாதை அமைப்பது என்றால் இதற்கு 2000 ஆண்டுகளுக்கும் அதிகம் ஆகலாம் என்று ஒரு கருத்துக் கணிப்பு சொல்கிறது என்றால் பார்த்துகொள்ளுங்கள் ,

ப்பொழுது ஒவ்வொரு நாடும் தனது பொருளாதாரத்தில் தன்னை உயர்ந்த தரவரிசையில் கொண்டுவர பல விதமான முயற்சிகளை பயன்படுத்தி வருகிறார்கள். ஒரு வேலை பில்கேட்ஸ் தனக்கென்று ஒரு தனி நாட்டை உருவாக்கினால் இப்பொழுது இருக்கும் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் பணக்கார நாடுகளின் பட்டியலில் பத்து இடங்களுக்குள் பில்கேட்ஸ் வந்துவிடுவார் என்றால் பார்த்துகொள்ளுங்கள் .

ப்படி இன்னும் இவரின் சொத்து மதிப்பைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் பதிவின் தொடக்கத்தில் நான் குறிப்பிட்டு இருப்பது போல் அவரின் சொத்தின் மதிப்பை தாண்டும் என்பது உண்மை. சரி உறவுகளே முயற்சி செய்து நம்பிக்கை இழக்காமல் உழைத்தால் நாளை நாம் ஒவ்வொருவரும் ஒரு பில்கேட்ஸ் தான் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. பதிவு பிடித்திருந்தால் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் மீண்டும் ஒரு புதுமையானத் தகவலுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன் .


By : Ice Digitals........

Monday, January 3, 2011

File New

பைல் புதியதாக உருவாக்குவது எப்படி ?                                
அகலம் 12  இன்ச்
உயரம் 8  இன்ச்
அடர்த்தி 200
கலர் RGB 8bit
பின் பகுதி Transparent
இவை அனைத்தும் மிக முக்கியம் ...